
உங்களுக்கு புதிதாக பிறந்த குழந்தைக்கான இந்திய தடுப்பூசி சார்ட் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. தடுப்பூசி செலுத்திய பிறகு உங்கள் குழந்தை எப்படி அதற்கு ரியாக்ட் செய்யும் என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள். சரிதானே? எல்லாவற்றிற்கும் மேலாக, ஊசிக்கு யார்தான் பயப்படாமல் இருப்பார்கள்? நீங்கள் இப்போது ஒரு பெற்றோர். ஆனால் உங்களுக்கு ஊசி போட வேண்டும் என்றால் அதைத் தவிர்ப்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க நீங்கள் இன்னும் முயற்சி செய்கிறீர்கள், இல்லையா? உங்கள் குழந்தைக்கு ஆணோ/பெண்ணோ கண்டிப்பாக குழந்தைக்கான தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
ஊசி போட்ட பிறகு குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல் அல்லது ஊசி போட்ட இடத்தில் வலி ஏற்படும். அல்லது தடுப்பூசி போட்ட பிறகு பொதுவாக குழந்தை வீண் வம்பு செய்யும் என்பதால், உங்கள் குழந்தையை அமைதிப்படுத்துவதற்கு சில வழிகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். காய்ச்சல் வந்தால் பொதுவாக தடுப்பூசி அதன் வேலையைச் சரியாகச் செய்கிறது என்பதைக் காட்டுகிறது.
எனவே, மற்ற பெற்றோர்களைப் போலவே, உங்கள் குழந்தை தடுப்பூசி செலுத்திய பிறகு அழுவது இயல்பானதா? என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், பதில் ஆம்! என்பதாகவே இருக்கும். எனவே, தயவுசெய்து குழந்தை தடுப்பூசி சார்ட்டை பின்பற்றுங்கள். உங்கள் குழந்தைக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்துவதை குழந்தை தடுப்பூசி அட்டவணையில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி சார்ட்டை பாருங்கள். புதிதாகப் பிறந்த குழந்தைக்கான தடுப்பூசி சார்ட்டையும் இது கொண்டிருக்கிறது.
|
வயது |
தடுப்பூசிகள் |
வியாதிகள் |
|
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி |
பிசிஜி - டோஸ் 1 |
காசநோய் |
|
ஓபிவிடி - டோஸ் 0 |
போலியோ |
|
|
ஹெப் பி - டோஸ் 1 |
ஹெபடைடிஸ் பி |
|
|
6-8 வாரங்கள் |
டிடிஏபி/டிடிடபிள்யூபி - டோஸ் 1 |
டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் |
|
ஹிப் டோஸ் 1 |
ஹீமோபைலஸ் இன்ஃப்ளூயன்ஸா |
|
|
ரோட்டாவைரஸ் டோஸ் 1 |
ரோட்டாவைரஸ் தொற்று |
|
|
ஐபிவி (இன்ஜெக்டபிள் போலியோ தடுப்பூசி) டோஸ் 1 |
போலியோ |
|
|
ஹெப் பி டோஸ் 2 |
ஹெபடைடிஸ் பி |
|
|
10-16 வாரங்கள் |
டிடிஏபி/டிடிடபிள்யூபி டோஸ் 2 |
டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் |
|
ஹிப் டோஸ் 2 |
ஹீமோபைலஸ் இன்ஃப்ளூயன்ஸா |
|
|
ரோட்டாவைரஸ் டோஸ் 2 |
ரோட்டாவைரஸ் தொற்று |
|
|
ஐபிவி டோஸ் 1 |
போலியோ |
|
|
14-24 வாரங்கள் |
டிடிஏபி/டிடிடபிள்யூபி டோஸ் 3 |
டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் |
|
ஹிப் டோஸ் 3 |
ஹீமோபைலஸ் இன்ஃப்ளூயன்ஸா |
|
|
ரோட்டாவைரஸ் டோஸ் 3 |
ரோட்டாவைரஸ் தொற்று |
|
|
ஐபிவி டோஸ் 3 |
போலியோ |
|
|
6 மாதங்கள் |
ஓபிவி டோஸ் 2 |
போலியோ |
|
ஹெப் பி டோஸ் 3 |
ஹெபடைடிஸ் பி |
|
|
9 மாதங்கள் |
ஓபிவி டோஸ் 2 |
போலியோ |
|
சின்னம்மை டோஸ் 1 |
சின்னம்மை |
|
|
எம்எம்ஆர் டோஸ் 1 |
சின்னம்மை, கழுத்தில் ஏற்படும் வீக்க வியாதி, மற்றும் ரூபெல்லா |
|
|
9-12 மாதங்கள் |
டைபாய்டு சிவி டோஸ் 1 |
டைபாய்டு |
|
12 மாதங்கள் |
ஹெப் ஏ தடுப்பூசி) டோஸ் 1 |
ஹெபடைடிஸ் ஏ |
|
15 மாதங்கள் |
பிவிசி பூஸ்டர் |
நிமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி |
|
எம்எம்ஆர் டோஸ் 2 |
சின்னம்மை, கழுத்தில் ஏற்படும் வீக்க வியாதி, மற்றும் ரூபெல்லா |
|
|
16-18 மாதங்கள் |
ஐபிவி பூஸ்டர் |
போலியோ |
|
ஹிப் வகை பி தடுப்பூசி பூஸ்டர் |
ஹீமோபைலஸ் இன்ஃப்ளூயன்ஸா |
|
|
டிடிஏபி/டிடிடபிள்யூபி பூஸ்டர் |
டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் |
|
|
18 மாதங்கள் |
ஹெப் ஏ டோஸ் 2 |
ஹெபடைடிஸ் ஏ |
|
2 வயது |
டைபாய்டு பூஸ்டர் |
டைபாய்டு |
|
4-6 வயது |
ஓபிவி டோஸ் 3 |
போலியோ |
|
டைபாய்டு பூஸ்டர் |
டைபாய்டு |
|
|
டிடிஏபி/டிடிடபிள்யூபி பூஸ்டர் |
டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் |
உங்கள் சுகாதார நிபுணர் இந்த லிஸ்டில் உள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை வழங்குவார்கள். உங்கள் குழந்தை இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசியில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி சரியான நேரத்தில் சரியான அளவு தடுப்பூசி செலுத்திக் கொள்வதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளின் பட்டியல் உங்கள் குழந்தையின் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள திட்டமிட உங்களுக்கு உதவும்.
6 வார குழந்தைக்கான தடுப்பூசி பற்றிய தகவல்கள் உங்களுக்குத் தேவைப்பட்டாலோ, வேறு எந்த வயது குழந்தைக்கான தடுப்பூசி பற்றிய தகவல் மற்றும் அதற்கான கட்டண விவரங்கள் தேவைப்பட்டாலோ நீங்கள் இந்தியாவில் குழந்தைகளுக்கான கட்டணங்களுடன் கூடிய தடுப்பூசி சார்ட்டில் பார்க்கலாம். நீங்கள் இந்தியாவில் மாற்றப்பட்ட கட்டணங்களை அரசு குழந்தை தடுப்பூசி சார்ட்டிலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தடுப்பூசிகள் முக்கியம். இருப்பினும், உங்கள் குழந்தை வலியில் இருப்பதைப் பார்ப்பது உங்களுக்கு வேதனையைத் தரலாம். பலருக்கு பயத்தை ஏற்படுத்த சிரஞ்சி மட்டுமே போதுமானதாக இருக்கிறது. எனினும், உங்கள் குழந்தை தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய நீங்கள் ரிலாக்சாக இருக்க வேண்டும். பயங்கரமான நோய்களை எதிர்த்து போராட உங்கள் குழந்தைக்கு நோயெதிர்ப்பு சக்தி மண்டலத்தை உருவாக்கும் பணியை தடுப்பூசிகள் செய்கிறது.
உங்கள் குழந்தை தடுப்பூசி செலுத்திய பிறகும் தொடர்ச்சியாக அழுது கொண்டிருக்கிறதா? அது 6-மாதக் குழந்தைக்கான தடுப்பூசியோ அல்லது 9-மாதக் குழந்தைக்கான தடுப்பூசியோ இந்தியவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய ஒவ்வொரு அட்டவணை வந்த பிறகும் குழந்தை அழுவது பொதுவான நிகழ்வாகும். தடுப்பூசி செலுத்திய பிறகு உங்கள் குழந்தையின் அசௌகரியத்தை குறைக்கவும், உங்கள் குழந்தையை அமைதிப்படுத்தவும் பயனுள்ள, நிரூபிக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தவும். இந்த அணுகுமுறை 5-எஸ் அணுகுமுறை என்று அழைக்கப்படுகிறது.
குழந்தைகள், குறிப்பாக ஐந்து மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள் இறுக்கமாக துணியைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும். இதுதான் ஸ்வாட்லிங் என்று அழைக்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு, இதுபோன்று குழந்தைக்கு நீங்கள் ஸ்வாடில் செய்தால் அமைதிப்படுத்த முடியும். தடுப்பூசி போட்டுக் கொள்ள அழைத்துச் செல்வதற்கு முன்பு உங்கள் குழந்தையை மென்மையான போர்வையைப் பயன்படுத்திக்கூட இறுக்கமாக கட்டலாம். இருப்பினும், எந்த இடத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டுமோ அங்கு இறுக்கமாக துணியை சுற்றக் (Swaddling) கூடாது.
குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பிறகு குழந்தையின் வயிற்றை ஒரு பக்கமாக சாய்ந்திருக்குமாறு வைத்து படுக்க வைக்கலாம். இது குழந்தைகளை நன்றாக உணர வைக்கும். உண்மையில், நர்ஸுகள் குழந்தைகளை தடுப்பூசி போட்ட பிறகு இப்படிதான் எடுத்துச் சென்று பெற்றோரிடம் கொடுப்பார்கள்.
தடுப்பூசி போட்ட குழந்தையோ அல்லது போடாத குழந்தையோ, குறிப்பாக புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு அசைவது மிகவும் பிடிக்கும். குழந்தைகள் தங்கள் ஆரம்ப கால வாழ்க்கையில் வழக்கமாக அனுபவிக்கும் பல பிரச்சனைகளுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும். நீங்கள் அவர்களை தூங்க வைக்கும்போது அல்லது அவர்கள் விளையாடும்போது கூட அவர்கள் அசைந்தாடுவதை விரும்புகிறார்கள். எனவே, குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பிறகு, அவர்களை ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்துக்கு கைகளில் வைத்து அசைந்தாடச் செய்யுங்கள். அவர்கள் அழுதாலும் இதைச் செய்யுங்கள்.
குழந்தைகள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது தடுப்பூசி போட்டிருக்கும்போது, அவர்களை அமைதிப்படுத்த வேண்டுமென்றாலோ அவர்களின் வலியை மறக்கச் செய்ய வேண்டும் என்றாலோ அவர்களுக்கு வழக்கமாக நாம் செய்வதைதான் செய்ய வேண்டும். உதாரணமாக, ஒரு பாட்டிலை குழந்தை உறிஞ்சினால் அல்லது நிப்பிளை உறிஞ்ச விரும்பினால், அதைச் செய்ய அவர்களை அனுமதியுங்கள். அல்லது அவர்களை அமைதிப்படுத்த தாய்ப்பால் கொடுங்கள். இது அவர்களின் துயரத்தை குறைக்க உதவும்.
உங்கள் குழந்தை தடுப்பூசி செலுத்தியதால் வலி ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தால் அடம் பிடித்தாலோ அமைதியாக இரு என குறிப்பிடும் வகையில் ‘ஷ்’ என்று நீங்கள் ஒலி எழுப்பினால் அவர்கள் உடனடியாக அமைதியாகி விடுவார்கள். எனவே, அடுத்த முறை உங்கள் குழந்தை வலியாலோ அல்லது முரட்டுத்தனமாக நடந்துகொண்டாலோ ‘ஷ்’ என்று கூறி அமைதிப்படுத்துங்கள்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் தடுப்பூசிகள்: கர்ப்ப காலத்தில் டிடி ஊசியை எப்போது போட்டுக் கொள்ள வேண்டும்
தடுப்பூசி செலுத்திய பிறகு உங்கள் குழந்தை அசெளகரியமாக உணர்ந்தால், நீங்கள் இந்த ஐந்து டெக்னிக்குகளில் குறைந்தது நான்கையாவது பயன்படுத்துங்கள். இவை பல ஆய்வுகளுக்கு பிறகு பயன்பாட்டுக்கு வந்தவையாகும். மேலும், உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட்ட இடத்தில் நன்றாக தேய்த்து விடுங்கள். அதுவும், அவர்களின் வலியைக் குறைக்க உதவும்.
தடுப்பூசி போடுவது உங்கள் குழந்தையின் ஹெல்த்திற்கு நல்லது. ஆம், சில பக்க விளைவுகள் ஏற்படக் கூடும்தான். எனினும், பக்க விளைவுகள் தற்காலிகமானவைதான். மேலும், பக்க விளைவுகள் தடுப்பூசி நன்றாக வேலை செய்கிறது என்பதை காட்டுகிறது. எனவே, இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி சார்ட்டை கேளுங்கள் மற்றும் உங்கள் சுகாதார நிபுணருடன் உரிய கால இடைவெளியில் உங்கள் குழந்தை தடுப்பூசி போட்டுக் கொள்வது தொடர்பாக ஆலோசியுங்கள்.
Yes
No


















Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?
Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum
மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்
3 மந்த் பேபி எப்படி இருக்கும்
அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |